Afghanistan cricket: Cricket News & Match Updates
டி20 உலகக்கோப்பை: மலிங்கா சாதனையை தகர்த்த ரஷித் கான்!
ஐக்கிய அரபு அமீரகத்தில் தற்போது டி20 உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 12-சுற்றுப் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்த தொடரில் ஏற்கனவே சில வீரர்கள் சில முக்கியமான சாதனைகளை படைத்து வரும் நிலையில் தற்போது ஆஃப்கானிஸ்தான் அணியை சேர்ந்த முன்னணி சுழற்பந்து வீச்சாளரான ரஷீத் கான் டி20 கிரிக்கெட் வரலாற்றில் மிகப்பெரிய சாதனையை நிகழ்த்தியுள்ளார். அவரின் அந்த சாதனைக்காக வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.
அதன்படி நேற்றைய லீக் போட்டியில் பாகிஸ்தான் அணியை எதிர்த்து ஆஃப்கானிஸ்தான் அணி விளையாடியது. இந்த போட்டியில் முதலில் விளையாடிய ஆஃப்கானிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 147 ரன்களை மட்டுமே எடுக்க 148 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி விளையாடியது. இறுதியில் பாகிஸ்தான் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பை பிரகாச படுத்தியுள்ளது. Read More...