Liam livingstone: Cricket News & Match Updates
15 பந்துகளில் அரைசதம் விளாசிய லிவிங்ஸ்டோன்; ஆர்சிபி ரசிகர்கள் கொண்டாட்டம்!
நடப்பு சீசன் அபுதாபி டி10 லீக் தொடரானது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரின் 18ஆவது லீக் போட்டியில் டெல்லி புல்ஸ் மற்றும் பங்களா டைகர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. அதன்படி அபுதாபியில் உள்ள ஷேக் சயீத் கிரிக்கெட் மைதானத்தில் ந்டைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற பங்களா டைகர்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து டெல்லி புல்ஸ் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.
அதன்படி களமிறங்கிய டெல்லி புல்ஸ் அணியானது எதிரணி பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து நடையைக் கட்டினர். இருப்பினும் இறுதியில் களமிறங்கிய நிகில் சௌத்ரி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் 16 பந்துகளில் 7 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 47 ரன்களைச் சேர்த்து அணிக்கு தேவையான ஃபினிஷிங்கை கொடுத்தார். இதன்மூலம் டெல்லி புல்ஸ் அணி 10 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 126 ரன்களைச் சேர்த்தது. பங்களா டைகர்ஸ் அணி தரப்பில் டேவிட் பெய்ன், ஜோஷுவா லிட்டில் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். Read More...