Kl rahul: Cricket News & Match Updates
மீண்டும் வலுவாக திரும்புவோம் - கேஎல் ராகுல்
இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையே 3ஆவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நேற்று கேப்டவுன் மைதானத்தில் நடைபெற்றது. ஏற்கனவே இந்த தொடரின் முதல் இரண்டு ஆட்டங்களிலும் வெற்றி பெற்றிருந்த தென்னாப்பிரிக்க அணியானது 2 க்கு 0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியிருந்த நிலையில் நேற்றைய போட்டியில் இந்திய அணி ஆறுதல் வெற்றியை ஆவது பெறுமா என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் நேற்றைய மூன்றாவது போட்டியில் முதலில் விளையாடிய தென் ஆப்பிரிக்கா அணி 287 ரன்கள் குவிக்க அடுத்ததாக இந்திய அணி 283 ரன்கள் மட்டுமே குவித்து 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. இதன்மூலம் இந்திய அணி 3 க்கு 0 என்ற கணக்கில் இந்த தொடரினை தவற விட்டுள்ளது. கேஎல் ராகுல் தலைமையிலான இந்திய அணி இந்த மூன்று போட்டிகளிலுமே அடுத்தடுத்து தோல்வியை சந்தித்துள்ளதால் பெரிய விமர்சனங்களை சந்தித்து உள்ளது. Read More...