Indian cricket team: Cricket News & Match Updates
இந்திய தேர்வு குழுவினரை கடுமையாக விமர்சித்த திலீப் வெங்சர்க்கார்!
2021ஆம் ஆண்டு கரோனா பரவலின் போது இந்திய அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது, இளம் வீரர்களை கொண்ட இரண்டாம் கட்ட இந்திய அணியினர் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. அந்த அணிக்கு கேப்டனாக ஷிகர் தவான் செயல்பட்டார். அதனைத் தொடர்ந்து டி20 மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டுமே ரோஹித் சர்மா கவனம் செலுத்தி வந்ததால், ஒருநாள் தொடர்களில் இரண்டாம் கட்ட இந்திய அணியே பங்கேற்று வந்தது.
அந்த அணிக்கு ஷிகர் தவான் கேப்டனாக இருந்து இளம் வீரர்களை வழிநடத்தி வந்தார். ஆனால் அந்த அணியில் ஸ்ரேயாஸ் ஐயரை தவிர்த்து வேறு எந்த வீரருக்கும் தொடர்ச்சியாக வாய்ப்பு வழங்கப்படவில்லை. இன்னும் சொல்லப்போனால் ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன், சஞ்சு சாம்சன், தீபக் சஹர் உள்ளிட்டோருக்கு போதுமான வாய்ப்புகளை இந்திய அணி வழங்கவில்லை. இதனால் அடுத்தக் கட்ட கேப்டனை உருவாக்குவதில் பிசிசிஐ சிரமங்களை சந்தித்து வருகிறது. Read More...