Icc odi world cup 2023: Cricket News & Match Updates
தொடர் முழுவதுமே எனது ஆட்டம் இப்படி தான் இருக்கும் - ரஹ்மனுல்லா குர்பாஸ்!
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இதில் நேற்று டெல்லியில் நடைபெற்ற லீக் போட்டியில் யாரும் எதிர்பாராத வகையில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணியை 69 ரன்கள் வித்தியாசத்தில் ஆஃப்கானிஸ்தான் அணி வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.
தலைநகர் டெல்லியில் நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஃப்கானிஸ்தான் சிறப்பாக விளையாடி 284 ரன்கள் சேர்த்தது.அதிகபட்சமாக ரஹமதுல்லா குர்பாஸ் 80 ரன்களும் இக்ரம் கில் 58 ரன்களும் எடுக்க இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக ஆதில் ரஷித் 3 விக்கெட்களை சாய்த்தார். ஆனால் 285 ரன்கள் துரத்திய இங்கிலாந்து ஆரம்ப முதலே சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து ஆஃப்கானிஸ்தானின் தரமான சுழல் பந்து வீச்சில் 40.3 ஓவரில் 215 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி தோல்வியை சந்தித்தது. Read More...