Icc odi world cup 2023: Cricket News & Match Updates
ஹர்திக் பாண்டியாவின் காயம் குறித்து அப்டேட் வழங்கிய பிசிசிஐ!
நேற்று இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையேயான உலகக்கோப்பை லீக் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது. இந்தப் போட்டியில் இந்திய அணியின் பேட்டிங், பவுலிங், பீல்டிங் என அனைத்து துறைகளுமே மிகச்சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தின. இந்திய அணி இந்த உலக கோப்பையில் நான்காவது போட்டியில் நான்காவது வெற்றியை பதிவு செய்து, புள்ளி பட்டியல் இரண்டாவது இடத்தில் நீடிக்கிறது.
இந்த நிலையில் நேற்றைய போட்டியில் ஆட்டத்தின் ஒன்பதாவது ஓவரை வீச வந்த ஹர்திக் பாண்டியாவுக்கு, அவருடைய முதல் ஓவராக அமைந்த அந்த ஓவரிலேயே, பந்தை தடுப்பதற்காக முயற்சி செய்து முட்டியில் அடிபட்டு காயம் உருவானது. இதற்குப் பிறகு மருத்துவக் குழு மைதானத்திற்கு உள்ளே வந்து சிகிச்சை அளித்தும் கூட அவரால் பந்து வீச முடியவில்லை. இதனால் கேப்டன் ரோஹித் சர்மா அவரை உடனே வெளியே சென்று ஓய்வு எடுக்குமாறு அனுப்பி வைத்து விட்டார். Read More...