Suryakumar yadav: Cricket News & Match Updates
சூர்யகுமார் யாதவை பாராட்டிய ஏபிடி வில்லியர்ஸ்!
ஆஸ்திரேலியாவில் அனல் பறக்க நடைபெற்று வரும் 2022 ஐசிசி டி20 உலக கோப்பையின் சூப்பர் 12 சுற்று எதிர்பாராத திருப்பங்களுடன் முடிந்துள்ளது. இந்த தொடரில் 2007க்குப்பின் 2வது கோப்பையை வெல்லும் முனைப்புடன் களமிறங்கியுள்ள இந்தியா 5 போட்டிகளில் 4 வெற்றிகளை பதிவு குரூப் 2 புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்து அரை இறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. குறிப்பாக முதல் 4 போட்டிகளிலேயே அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்த இந்தியா நவம்பர் 6ஆம் தேதியன்று நடைபெற்ற ஜிம்பாபேவுக்கு எதிரான சம்பிரதாய கடைசி போட்டியில் 71 ரன்கள் வித்தியாசத்தில் பெரிய வெற்றியை சுவைத்தது.
இப்போட்டியில் அதிரடியாக விளைடாடிய சூர்யகுமார் அதிரடி காட்டியதால் கடைசி 5 ஓவரில் 69 ரன்கள் குவித்து இந்தியா அசத்தியது. அதை விட கடைசி ஓவரில் 18 ரன்கள் குவித்தது உட்பட 244.00 ஸ்ட்ரைக் ரேட்டில் வெளுத்து வாங்கிய அவர் மைதானத்தின் நாலா புறங்களிலும் பவுண்டரிகளையும் சிக்ஸர்களையும் பறக்க விட்டது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. இப்படி அறிமுகமானது முதலே பெரும்பாலான போட்டிகளில் சூழ்நிலை எதுவாக இருந்தாலும் களமிறங்கிய முதல் பந்திலிருந்தே சரவெடியாக செயல்படும் சூப்பர் ஸ்டார் ஸ்டைலை பின்பற்றும் சூரியகுமார் அட்டகாசமான செயல்பாடுகளை வெளிப்படுத்தி குறுகிய காலத்திலேயே உலகின் நம்பர் ஒன் டி20 பேட்ஸ்மேனாக முகமது ரிஸ்வானை முந்தி சாதனை படைத்துள்ளார். Read More...