Sl vs sa dream 11: Cricket News & Match Updates
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: இலங்கை vs தென் ஆப்பிரிக்கா - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
Sri Lanka vs South Africa Dream11 Prediction Match 4, ICC T20 World Cup 2024: ஒன்பதாவது ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது இன்று முதல் கோலாகலமாக தொடங்கியுள்ளது. இத்தொடரில் நாளை நடைபெறவுள்ள நான்காவது லீக் போட்டியில் குரூப் டி பிரிவில் இடம்பிடித்துள்ள தென் ஆப்பிரிக்கா மற்றும் இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. நடப்பு சீசனில் நடைபெறும் முதல் மிக பெரிய போட்டி இது என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன. சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்தியுள்ள இரு அணிகள் நேருக்கு நேர் பலப்பரீட்சை நடத்தவுள்ளதால் நிச்சயம் இப்போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது.
SL vs SA Match Details
- மோதும் அணிகள் - இலங்கை vs தென் ஆப்பிரிக்கா
- இடம் - நசாவ் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் மைதானம், நியூயார்க்
- நேரம் - இரவு 8 மணி (இந்திய நேரப்படி)
SL vs SA : Pitch Report
நியூயார்க்கில் உள்ள நசாவ் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இதுவரை எந்த ஒரு சர்வதேச போட்டிகளையும் நடத்தவில்லை, இதனால் ஆடுகளத்தின் சரியான நடத்தையை கணிப்பது கடினமாக உள்ளது. இருப்பினும், சமீபத்தில் நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தை பார்க்கையுல் நிச்சயம் தொடக்கத்தில் பந்துவீச்சாளர்கள் ஆதிக்கத்தை செலுத்த முடியும். அதுமட்டுமின்றி இங்குள்ள பவுண்டரி எல்லைகளும் பெரியது என்பதால நிச்சயம் பேட்டர்கள் ரன்களைச் சேர்க்க தடுமாறுவார். அதேசமயம் அதிரடியாக விளையாட முயற்சிக்கு வீரர்களால் ரன்களை சேர்க்க முடியும் என்பதால் நிச்சயம் பேட்டர் மற்றும் பந்துவீச்சாளர்களுக்கு இடையே கடும் போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. Read More...
Related Cricket News for Sl vs sa dream 11 - Tesst
Cricket Special Today
-
- 06 Jul 2026 09:14