Mul vs pes probable xi: Cricket News & Match Updates
பிஎஸ்எல் 2025: முல்தான் சுல்தான்ஸ் vs பெஷாவர் ஸால்மி - ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்!
Multan Sultans vs Peshawar Zalmi Dream11 Prediction, PSL 2025: பிஎஸ்எல் என்றழைக்கப்படும் பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் 10ஆவது சீசன் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் நாளை நடைபெறும் 9ஆவது லீக் போட்டியில் முல்தான் சுல்தான்ஸ் மற்றும் பெஷாவர் ஸால்மி அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளது.
இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த போட்டியானது ராவல்பிண்டியில் உள்ள ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் முல்தான் சுல்தான்ஸ் அணி நடப்பு தொடரில் விளையாடிய இரண்டு போட்டிகளிலும் தோல்வியைத் தழுவியுள்ளது. அதேசமயம் பெஷாவர் ஸால்மி அணியும் இரண்டு போட்டியில் விளையாடி இரண்டு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இரு அணிகளும் இதுவரை தொடரில் வெற்றியைப் பதிவுசெய்த நிலையில் இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ளதால், இதில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. Read More...