Matthew wade: Cricket News & Match Updates
SA20 League: கேப்டவுனை வழியனுப்பி வைத்தது ஜோபர்க் சூப்பர் கிங்ஸ்!
தென் ஆப்பிரிக்கா டி20 லீக் தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டது. பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ், ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் ஆகிய 3 அணிகளும் அரையிறுதிக்கு முன்னேறிவிட்டன. இதையடுத்து 4ஆவது இடத்திற்கான போட்டியில் நேற்று நடந்த அரையிறுதிப் போட்டியில் கண்டிப்பாக வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் எம்ஐ கேப்டவுன் அணி, ஜோபர்க் சூப்பர் கிங்ஸை எதிர்கொண்டது. ஜோஹன்னஸ்பர்க்கில் நடந்த இந்தப் போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் கேப் டவுன் அணி பீல்டிங் தேர்வு செய்தது.
அதன்படி முதலில் விளையாடிய ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 189 ரன்கள் குவித்தது. ஏற்கனவே புள்ளிப் பட்டியலில் 2 ஆவது இடத்தில் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி தனக்கு எந்த கவலையும் இல்லை என்பதற்கேற்ப அதிரடி காட்டியது. தொடக்க வீரர்கள் இருவரும் டக் அவுட்டில் வெளியேற 3ஆவதாக வந்த ஹென்றிக்ஸ் 48 பந்துகளில் ஒரு சிக்சர் 11 பவுண்டரிகள் உள்பட 81 ரன்கள் குவித்து கடைசி வரை களத்தில் இருந்தார். மேத்யூ வேட் 18 பந்துகளில் ஒரு சிக்சர் 8 பவுண்டரிகள் உள்பட 40 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் 189 ரன்கள் குவித்தது. Read More...