Ireland tour zimbabwe 2023: Cricket News & Match Updates
ZIM vs IRE, 3rd ODI: ஜிம்பாப்வேவை வீழ்த்தி ஒருநாள் தொடரை வென்றது அயர்லாந்து!
ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த அயர்லாந்து அணி தற்போது மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது. அதன்படி இத்தொடரின் முதல் போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில், இரண்டாவது ஒருநாள் போட்டியில் அயர்லாந்து அணி வெற்றிபெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றது. இந்நிலையில் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது.
இப்போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய ஜிம்பாப்வே அணியின் தொடக்க வீரர் கும்பி ஒரு பக்கம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த மறுமுனையில் களமிறங்கிய கமுன்ஹுகம்வே ஒரு ரன்னிலும், கைடானோ 13 ரன்களிலும், இன்னசெண்ட் கையா 5 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்தனர் பின்னர் கும்பியுடன் இணைந்த கேப்டன் சிக்கந்தர் ரஸா நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். Read More...