Indian cricket team: Cricket News & Match Updates
அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வை அறிவித்தார் தினேஷ் கார்த்திக்!
ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்துள்ளது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடி வந்த தினேஷ் கார்த்திக் நடப்பு சீசனுடன் ஐபிஎல் தொடரிலிருந்து ஓய்வை அறிவித்தார். முன்னதாக இந்தாண்டு ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன்னதாகவே இதுதான் தன்னுடைய கடைசி ஐபிஎல் சீசனும் எனும் அறிவிப்பை வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இன்றைய தினம் தனது 39ஆவது பிறந்தநாளை கொண்டாடும் தினேஷ் கார்த்திக், தனது பிறந்தநாள் பரிசாக அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வை அறிவித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியைக் கொடுத்துள்ளார். இதுகுறித்து அவர் தனது சமூக வலைதள பக்கத்தில், “கடந்த சில நாள்களாக எனக்குக் கிடைத்து வரும் அன்பும், ஆதரவும் உண்மையில் நெகிழ்ச்சியடைய வைத்தது. என்னை இப்படி உணர வைத்ததற்காக ரசிகர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். Read More...