Hardik pandya: Cricket News & Match Updates
துபேவை விட ஹர்திக் பாண்டியாவிற்கு முன்னுரிமை அளிப்பேன் - சஞ்சய் மஞ்ச்ரேக்கர்!
அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் மீதான எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரிக்க தொடங்கியுள்ளன. அந்தவகையில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியானது இன்று நடைபெறவுள்ள பயிற்சி ஆட்டத்தில் வங்கதேசத்தை எதிர்கொள்கிறது. அதேசமயம் ஜூன் 05ஆம் தேதி நடைபெறும் முதல் லீக் போட்டியில் அயர்லாந்தை எதிர்கொள்ளவுள்ளது.
இந்நிலையில் இத்தொடரில் எந்த அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும், எந்த நான்கு அணிகள் அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறும், எந்தெந்த வீரர்கள் போட்டியில் ஆதிக்கம் செலுத்துவார்கள் என்ற கருத்து கணிப்புகளை முன்னள் வீரர்கள் கணித்து வருகின்றனர். அதன்படி நடப்பு உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் ஷிவம் தூபேவை காட்டிலும் ஹர்திக் பாண்டியா விளையாடுவதே சிறந்தது என முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தெரிவித்துள்ளார். Read More...