Hardik pandya: Cricket News & Match Updates
பயிற்சி ஆட்டம்: அர்ஷ்தீப், தூபே அபார பந்துவீச்சு; வங்கதேசத்தை பந்தாடியது இந்தியா!
ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கும் ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது நாளை முதல் கோலாகலமாக தொடங்கவுள்ளது. இந்நிலையில் இத்தொடருக்கு முன்னதாக அணிகள் பயிற்சி ஆட்டங்களில் விளையாடி வருகின்றனர். அந்தவகையில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான பயிற்சி ஆட்டமானது இன்றைய தினம் நியூயார்க்கில் உள்ள நசாவ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றுவருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்து வங்கதேச அணியை பந்துவீச அழைத்தது.
அதன்படி களமிறங்கிய இந்திய அணிக்கு ரோஹித் சர்மா மற்றும் சஞ்சு சாம்சன் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் சஞ்சு சாம்சன் ஒரு ரன் மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் களமிறங்கிய ரிஷப் பந்த் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். அதிலும் குறிப்பாக ஷாகிப் அல் ஹசன் ஓவரில் மூன்று சிக்ஸர்களை விளாசி மிரட்டினார். அதேசமயம் அதிரடியாக விளையாட முயற்சி செய்த ரோஹித் சர்மா 2 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 23 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார். Read More...