Anrich nortje: Cricket News & Match Updates
T20 WC 2024: பார்ட்மேன், நோர்ட்ஜே அபாரம்; நெதர்லாந்தை 103 ரன்களில் சுருட்டியது தென் ஆப்பிரிக்கா!
ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற 16ஆவது லீக் ஆட்டத்தில் குரூப் டி பிரிவில் இடம்பிடித்துள்ள நெதர்லாந்து மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் பலப்பரீட்சை நடத்தின. நியூயார்க்கில் உள்ள நசாவ் கவுண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி கேப்டன் ஐடன் மார்க்ரம் முதலில் பந்துவீசுவதாக அறிவித்ததுடன் நெதர்லாந்து அணியை பேட்டிங் செய்ய அழைத்தார். அதன்படி களமிறங்கிய நெதர்லாந்து அணிக்கு மேக்ஸ் ஓடவுட் மற்றும் மைக்கேல் லெவிட் இணை தொடக்கம் கொடுத்தனர்.
இதில் மைக்கேல் லெவிட் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து 2 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த மேக்ஸ் ஓடவுட்டும் தனது விக்கெட்டை இழந்தார். பின்னர் களமிறங்கிய விக்ரஜித் சிங் அதிரடியாக தொடங்கினாலும், 12 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அடுத்து வந்த நட்சத்திர வீரர்கள் பாஸ் டி லீட் 6 ரன்களிலும், கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ் 10 ரன்களிலும், தேஜா நிடமானுரு ரன்கள் ஏதுமின்றியும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். இதன் காரணமாக நெதர்லாந்து அணி 48 ரன்களிலேயே 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. Read More...