Anrich nortje: Cricket News & Match Updates
உலகக்கோப்பையில் இந்த வீரர் தான் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றுவார் - ஜாக் காலிஸ்!
இந்தியாவில் இந்த முறை நடைபெற இருக்கும் 13ஆவது ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர், முதல் முறையாக இந்தியாவில் முழுமையாக நடத்தப்பட இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. 13ஆவது ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் முதல் போட்டியில் அக்டோபர் ஐந்தாம் தேதி குஜராத் அகமதாபாத் மைதானத்தில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து மற்றும் இறுதிப் போட்டியில் கடந்த முறை தோல்வி அடைந்த நியூசிலாந்து மோதுகிறது.
இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் அக்டோபர் எட்டாம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் அதிக முறை ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்ற ஆஸ்திரேலியா அணியுடன் மோதுகிறது. நான்கு வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கான நாள் நெருங்க நெருங்க, அதன் வெப்பம் கிரிக்கெட் ரசிகர்களை தாண்டி முன்னாள் வீரர்களையும் சுட ஆரம்பித்திருக்கிறது. Read More...