Wiw vs banw: Cricket News & Match Updates
WC Qualifier: வங்கதேசத்தை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் வெற்றி!
மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கான தகுதிச்சுற்று போட்டிகள் பாகிஸ்தானில் நடைபெற்று வருகின்றன. இதில் இன்று லாகூரில் நடைபெற்ற 11ஆவது லீக் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் வங்கதேச மகளிர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச மகளிர் அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது.
அதன்படி களமிறங்கிய வங்கதேச அணியின் தொடக்க வீராங்கனை சோபனா மொஸ்டரி 6 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் ஜோடி சேர்ந்த ஃபர்ஹானா ஹக் - ஷர்மின் அக்தர் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் ஷர்மின் அக்தர் தனது அரைசதத்தைப் பூர்த்தி செய்து அசத்தினார். இதன்மூலம் இருவரின் பார்ட்னர்ஷிப்பும் 100 ரன்களை கடந்த நிலையில் ஃபர்ஹானா ஹக் 3 பவுண்டரிகளுடன் 42 ரன்களிலும், ஷர்மின் அக்தர் 10 பவுண்டரிகளுடன் 67 ரன்களிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். Read More...