Wasim akram: Cricket News & Match Updates
கூடுதலாக பவுன்ஸ் ஆனால் மகிழ்ச்சி அடைய வேண்டாம் - இந்திய வீரர்களுக்கு வாசிம் அக்ரம் அட்வைஸ்!
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியானது நாளை லண்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியும், பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியும் பலப்பரீட்சை நடத்த இருக்கின்றனர். இதற்காக தற்போது இருஅணி வீரர்களும் தீவிர பயிற்சியினை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தை கைப்பற்றும் என்பதன் காரணமாக இந்த போட்டியின் மீதான எதிர்பார்ப்பு தற்போது ரசிகர்கள் மத்தியில் உச்சத்தை தொட்டுள்ளது. இந்நிலையில் இந்த முக்கியமான இறுதிப்போட்டி குறித்து பல்வேறு முன்னாள் வீரர்களும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வரும் வேளையில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு இந்த இறுதிப் போட்டிக்கு முன்பாக பாகிஸ்தான அணியின் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம் ஒரு அறிவுரை ஒன்றினை வழங்கியுள்ளார். Read More...