Tamil cricket news: Cricket News & Match Updates
NZ vs IND: கேப்டனாக எப்படி செயல்படவுள்ளேன் என்பது குறித்து ஷிகர் தவான் விளக்கம்!
நியூசிலாந்துக்கு எதிரான ஒரு நாள் போட்டி வரும் வெள்ளிக்கிழமை தொடங்குகிறது. இந்த தொடரில் சீனியர் வீரர்களுக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ள நிலையில் இந்திய அணியின் தற்காலிக கேப்டனாக ஷிகர் தவான் செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கேப்டனாக எப்படி செயல்படுவேன் என்பது குறித்து ஷிகர் தவான் செய்தியாளர்களிடம் பேசியுள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், “கேப்டனாக நீங்கள் பதவியேற்கும் போது உங்களுக்கு நிறைய பொறுப்புகள் வருகிறது. நான் எப்போதுமே அணியில் உள்ள வீரர்களிடம் சகஜமாக பேசி பழகுவேன். அதுதான் என்னுடைய இயல்பு. இது கேப்டனாக எனக்கு நல்ல பலனை கொடுத்து இருக்கிறது. என்னுடைய முக்கிய பலமே நான் நெருக்கடியான கட்டத்தில் பதற்றம் இல்லாமல் இருப்பேன். இப்படி இருக்கும் போது உங்களால் அணியை நிர்வகிக்க முடியும். ஆட்டத்தில் தவறுகள் நடக்கத்தான் செய்யும் .அதிலிருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டுமே தவிர உங்கள் மீது நீங்கள் அழுத்தத்தை போட்டுக் கொள்ளக் கூடாது. Read More...