Tamil cricket news: Cricket News & Match Updates
ரஷித் கான் மட்டும்தான் சிறப்பாக விளையாடினார் - ஹர்திக் பாண்டியா பாராட்டு!
16ஆவது சீசன் ஐபிஎல் தொடரில் மிக முக்கியமான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 27 ரன்களில் குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி பிளே ஆப் வாய்ப்பை மிகப் பிரகாசப்படுத்தி கொண்டுள்ளது. இப்போட்டியில் டாசை இழந்து முதலில் பேட்டிங் செய்த மும்பை அணிக்கு சூரியகுமார் யாதவ் 49 பந்துகளில் அதிரடி அரைசதம் அடித்து 218 ரன்கள் வர முக்கியக் காரணமாக இருந்தார்.
இதற்கு அடுத்து தொடர்ந்து விளையாடிய குஜராத் அணியால் 191 ரன்கள் மட்டுமே 20 ஓவர்களுக்கு எடுக்க முடிந்தது. அந்த அணியின் ரஷித் கான் 79 ரன்களை 32 பந்துகளில் அடித்து மிரட்டினார். இந்த வெற்றியின் மூலம் 12ஆவது ஆட்டத்தில் ஏழு வெற்றிகள் உடன் 14 புள்ளிகள் எடுத்து புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்தை மீண்டும் பிடித்தது மும்பை. இப்போட்டியில் சதமடித்து அசத்திய சூர்யகுமார் யாதவுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. Read More...