Tamil cricket news: Cricket News & Match Updates
T20 WC 2024, Super 8: ஷாய் ஹோப், ரோஸ்டன் சேஸ் அபாரம்; அமெரிக்காவை பந்தாடி விண்டீஸ் அசத்தல் வெற்றி!
ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 8 சுற்று போட்டிகள் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் தொடரை நடத்தும் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்க அணிகள் பலப்பரீட்சை நடத்தின. பார்படாஸில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்து அமெரிக்க அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி களமிறங்கிய அமெரிக்க அணிக்கு ஸ்டீவன் டெய்லர் மற்றும் ஆண்ட்ரிஸ் கௌஸ் இணை தொடக்கம் கொடுத்தனர்.
இதில் ஸ்டீவன் டெய்லர் 2 ரன்களில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். பின்னர் இணைந்த ஆண்ட்ரிஸ் கௌஸ் - நிதீஷ் ரெட்டி இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் நிதீஷ் 20 ரன்களுக்கும், ஆண்ட்ரிஸ் கௌஸ் 29 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு திரும்ப, அடுத்து வந்த கேப்டன் ஆரோன் ஜோன்ஸும் 11 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். அவர்களைத்தொடர்ந்து களமிறங்கிய கோரி ஆண்டர்சன் மாற்றும் மிலந்த் குமார் ஆகியோரும் அடுத்தடுத்து பந்துகளில் விக்கெட்டை இழந்தார். Read More...