Usa vs wi: Cricket News & Match Updates
T20 WC 2024: கிறிஸ் கெயில் சாதனையை முறியடித்த நிக்கோலஸ் பூரன்!
ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 8 சுற்று போட்டிகள் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் தொடரை நடத்தும் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்க அணிகள் பலப்பரீட்சை நடத்தின. பார்படாஸில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்து அமெரிக்க அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.
அதன்படி களமிறங்கிய அமெரிக்கா அணி எதிரணி பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் 19.5 ஓவரில் 128 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியில் அதிகபட்சமாக ஆண்ட்ரிஸ் கௌஸ் 29 ரன்களும், நிதிஷ் குமார் 20 ரன்களும் எடுத்தனர். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஆண்ட்ரே ரஸல், ராஸ்டன் சேஸ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு ஷாய் ஹோப் - ஜான்சன் சார்லஸ் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். Read More...