Tamil cricket news: Cricket News & Match Updates
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: ஆஸ்திரேலியாவை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழையுமா இந்தியா?
ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை தொடரின் நடப்பாண்டு சீசன் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. மொத்தம் 20 அணிகள் பங்கேற்ற இத்தொடரில் இங்கிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளன. அதேசமயம் மீதமிருக்கும் இரு இடங்களுக்கான போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியா, ஆஃப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசம் ஆகிய நான்கு அணிகள் நீடித்து வருகின்றன.
இந்நிலையில் இன்று நடைபெறும் சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இதில் ஆஸ்திரேலிய அணி கட்டாயம் வெற்றிபெற்றாக வேண்டிய நிலையிலும், இந்திய அணி கணிசமான ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவாமல் இருக்க வேண்டிய நிலையிலும் இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ளதால் நிச்சயம் இப்போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இப்போட்டிக்கான இரு அணிகளின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன் மற்றும் இப்போட்டியின் ஃபேண்டஸி லெவன் குறித்து இப்பதிவில் பார்ப்போம். Read More...