Tamil cricket news: Cricket News & Match Updates
ஐபிஎல் 2025: கேகேஆர் அணியின் கேப்டனாக அஜிங்கியா ரஹானே நியமனம்?
ஐபிஎல் 18ஆவது சீசனுக்கான வீரர்கள் மெகா ஏலமானது கடந்த நவம்பர் 24, 25ஆம் தேதிகளில் சௌதீ அரேபியாவில் உள்ள ஜித்தா நகரில் நடைபெற்றது. நடைபெற்று முடிந்த வீரர்களுக்கான மெகா ஏலத்தில் அதிகபட்சமாக இந்திய அணியைச் சேர்ந்த விக்கெட் கீப்பர் ரிஷப் பந்தை ரூ.27 கோடிக்கு லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது.
அதற்கு முன்னர் இந்திய வீரர் ஸ்ரேயாஸ் ஐயரை ரூ.26.76 கோடிக்கு பஞ்சாப் கிங்ஸ் அணிஏலம் எடுத்திருந்தது. இதன்மூலம் ஐபிஎல் தொடர் வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட வீரர்கள் எனும் சாதனைகளையும் படைத்தனர். இதுதவிர்த்து, யாரும் எதிா்பாராத வகையில் இந்திய வீரா் வெங்கடேஷ் ஐயா் ரூ.23.75 கோடிக்கு கொல்கத்தா அணியால் வாங்கப்பட்டாா். இருப்பினும் நட்சத்திர வீரர்கள்டேவிட் வார்னர், பிரித்வி ஷா, கேன் வில்லியம்சன், ஆகியோரை எந்த அணியும் ஏலத்தில் எடுக்க ஆர்வம் காட்டவில்லை. Read More...