Tamil cricket news: Cricket News & Match Updates
இலங்கை vs ஆஸ்திரேலியா, முதல் டெஸ்ட் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
Sri Lanka vs Australia 1st Test Dream11 Prediction: ஆஸ்திரேலிய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், இரண்டு போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் விளையாட இருக்கிறது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டி நாளை (ஜனவரி 29) கலேவில் உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இத்தொடருக்கான இரு அணி வீரர்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகியும் வருகின்றனர். இதில் ஆஸ்திரேலிய அணி ஏற்கெனவே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ள நிலையில், இப்போட்டியை எதிர்கொள்கிறது. மறுபக்கம் இலங்கை அணியும் சமீப காலங்களில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றிகளைப் பெற்றுள்ளது. மேற்கொண்டு இரு அணியிலும் நட்சத்திர வீரர்கள் இருப்பதால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெற்று தொடரில் முன்னிலைப் பெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. Read More...