Tamil cricket news: Cricket News & Match Updates
1st Test, Day 3: சண்டிமால் அரைசதம்; ஃபாலோ ஆனை தவிர்க்க போராடும் இலங்கை!
இலங்கை - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கலேவில் உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணியில் டிராவிஸ் ஹெட் அதிரடியாக விளையாடி அரைசதமடித்து அசத்தியது 57 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அதனை தொடர்ந்து வந்த கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், கவாஜாவுடன் ஜோடி சேர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
தொடர்ந்து சிறப்பாக விளையாடிய இருவரும் சதமடித்து அசத்தினர். பின்னர் 141 ரன்கள் எடுத்த நிலையில் ஸ்டீவ் ஸ்மித் விக்கெட்டை இழந்தாலும், மறுமுனையில் தொடர்ந்து விளையாடிய உஸ்மான் கவாஜா சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதல் இரட்டை சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். அவருடன் இணைந்து விளையாடிய அறிமுக வீரர் ஜோஷ் இங்கிலிஸும் தனது முதல் சர்வதேச டெஸ்ட் சதத்தைப் பதிவுசெய்து அசத்த்தினார். பின் உஸ்மான் கவாஜா 232 ரன்களிலும், ஜோஷ் இங்கிலிஸ் 102 ரன்னிலும் என விக்கெட்டை இழக்க, ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 654 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளேர் செய்வதாக அறிவித்தது. Read More...