Suryakumar yadav: Cricket News & Match Updates
ஹாட்ரிக் கோல்டன் டக் அடித்த சூர்யகுமார்; மோசமான சாதனையில் முதலிடம்!
இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான கடைசி ஒரு நாள் போட்டி சென்னையில் நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் ஆடிய ஆஸ்திரேலியா 49 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 269 ரன்கள் எடுத்தது. இதில், அதிகபட்சமாக மிட்செல் மார்ஷ் 47 ரன்கள் எடுத்தார். டிராவிஸ் ஹெட் 33 ரன்கள் எடுத்தார். அதன் பிறகு வந்த மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியெறினர்.
இதையடுத்து கடின இலக்கை நோக்கி விளையாடிய இந்தியா அணி 49.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 248 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதில் அதிகபட்சமாக விராட் கோலி 54 ரன்களையும், ஹர்திக் பாண்டியா 40 ரன்களையும், ஷுப்மன் கில் 37 ரன்களைச் சேர்த்தனர். இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, 2-1 என்ற கணக்கில் ஒருநாள் தொடரைக் கைப்பற்றீயது. Read More...