Sunil narine: Cricket News & Match Updates
டாஸை விட போட்டியை வெல்வதே முக்கியம் என நினைக்கிறேன் - ஸ்ரேயாஸ் ஐயர்!
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 235 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக சுனில் நரைன் 81 ரன்களையும், பில் சால்ட், அங்கிரிஷ் ரகுவன்ஷி ஆகியோர் தலா 32 ரன்களையும் சேர்த்தனர்.
இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் மார்கஸ் ஸ்டொய்னிஸ் 36 ரன்களையும், கேப்டன் கேஎல் ராகுல் 25 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். இதனால் அந்த அணி 16.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 137 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் கேகேஆர் அணி 98 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்தது. Read More...