Ss vs lkk: Cricket News & Match Updates
TNPL 2024: ஷாருக் கான் அதிரடி அரைசதம்; ஸ்பார்டன்ஸை வீழ்த்தி கோவை கிங்ஸ் த்ரில் வெற்றி!
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வரும் தமிழ்நாடு பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடரின் 8ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இத்தொடரில் இன்று நடைபெற்ற 25ஆவது லீக் போட்டியில் லைகா கோவை கிங்ஸ் மற்றும் சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த சேலம் ஸ்பார்டன்ஸ் அணிக்கு விஷால் வைத்யா - கேப்டன் அபிஷேக் ஆகியோர் தொடக்கம் கொடுத்தனர். இதில் சிறப்பான தொடக்கத்தைப் பெற்ற விஷால் வைத்யா 36 ரன்களைச் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழந்தார்.
அவரைத்தொடர்ந்து கேப்டன் அபிஷேக்கும் 20 ரன்களில் நடையைக் கட்ட, அடுத்து களமிறங்கிய சுதன் சஞ்சீவியும் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்தர். அதேசமயம் மூன்றாவது விக்கெட்டிற்கு களமிறங்கி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய ராஜேந்திரன் விவேக் 4 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 43 ரன்களுக்கு ஆட்டமிழக்க, இறுதியில் அதிரடியாக விளையாடிய ஹரிஷ் குமார் 2 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் என 42 ரன்களைச் சேர்த்து அணிக்கு தேவையான ஃபினிஷிங்கைக் கொடுத்தார். இதன்மூலம் சேலம் ஸ்பார்டன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்தாலும் 174 ரன்களைச் சேர்த்தது. Read More...
Related Cricket News for Ss vs lkk - Tesst
டிஎன்பிஎல் 2023: ஸ்பார்ட்டன்ஸை பந்தாடியது கோவை கிங்ஸ்!
டிஎன்பிஎல் 2023: ராம் அரவிந்த் அரைசதம்; ஸ்பார்ட்டன்ஸுக்கு 200 டார்கெட்!
டிஎன்பிஎல் 2021: மழையால் சேலம் - கோவை ஆட்டம் ரத்து!
டிஎன்பிஎல் 2021: வெற்றியுடன் பயணத்தை தொடங்க போவது யார்? லைக்கா கோவை கிங்ஸ் vs சேலம் ஸ்பார்டன்ஸ்
Cricket Special Today
-
- 06 Oct 2026 12:33
-
- 06 Oct 2026 09:18
-
- 23 Sep 2026 11:30