Shaik rasheed: Cricket News & Match Updates
ஐபிஎல் 2025: தோனி, தூபே அசத்தல்; லக்னோவை வீழ்த்தி தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த சிஎஸ்கே!
ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் நாளுக்கு நாள் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை அதிகரித்து வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 30ஆவது ரிஷப் பந்த் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. லக்னோவில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இன்றைய போட்டிக்கான லக்னோ அணியின் லெவனில் மிட்செல் மார்ஷும், சிஎஸ்கே அணியின் லெவனில் ஷேக் ரஷீத், ஜேமி ஓவர்டன் ஆகியோரும் சேர்க்கப்பட்டிருந்தனர். இதையடுத்து களமிறங்கிய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு ஐடன் மார்க்ரம் - மிட்செல் மார்ஷ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஐடன் மார்க்ரம் 6 ரன்களில் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து களமிறங்கிய நட்சத்திர வீரரும், நடப்பு ஐபிஎல் தொடரில் அதிக ரன்களைக் குவித்தவருமான நிக்கோலஸ் பூரன் 8 ரன்களிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு திரும்பினர். Read More...