Scow vs thaiw: Cricket News & Match Updates
WC Qualifier: வங்கதேசம், ஸ்காட்லாந்து அணிகள் வெற்றி!
மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கான தகுதிச்சுற்று போட்டிகள் பாகிஸ்தானில் நடைபெற்று வருகின்றன. இதில் இன்று லாகூரில் நடைபெற்ற 7ஆவது லீக் போட்டியில் வங்கதேசம் மற்றும் அயர்லாந்து மகளிர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது.
அதன்படி களமிறங்கிய அயர்லாந்து அணிக்கு சாரா ஃபோர்ப்ஸ் - கேப்டன் கேபி லூயிஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் சாரா ஃபோர்ப்ஸ் 4 ரன்களில் ஆட்டமிழக்க, அவரைத்தொடர்ந்து கேபி லூயிஸும் 24 ரன்களில் விக்கெட்டை இழந்தார். பின்னர் இணைந்த ஏமி ஹண்டர் - ஓர்லா பிரெண்டர்காஸ்ட் இணை பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். அதன்பின் 33 ரன்களைச் சேர்த்த கையோடு ஏமி ஹண்டர் 33 ரன்களில் ஆட்டமிழக்க, மறுபக்கம் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட பிரெண்டர்காஸ்டும் 41 ரன்களுடன் நடையைக் கட்டினார். Read More...