Quinton de kock: Cricket News & Match Updates
எஸ்ஏ20 2025: சூப்பர் ஜெயண்ட்ஸை 142 ரன்களில் சுருட்டியது பார்ல் ராயல்ஸ்!
தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் எஸ்ஏ20 லீக் தொடரின் மூன்றாவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 18ஆவது லீக் ஆட்டத்தில் டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் பார்ல் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டர்பனில் உள்ள கிங்ஸ்மீத் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய அந்த அணிக்கு குயின்டன் டி காக் மற்றும் மேத்யூ பிரீட்ஸ்கி இணை அதிரடியான தொடக்கத்தை கொடுத்து அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தனர். இதில் இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 62 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் மேத்யூ பிரீட்ஸ்கி 26 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து அதிரடியாக விளையாடிய குயின்டன் டி காக்கும் 3 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 43 ரன்களைச் சேர்த்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்ததுடன், தனது அரைசதத்தைப் பதிவுசெய்யும் வாய்ப்பையும் இழந்தார். Read More...