Karim janat: Cricket News & Match Updates
IND vs AFG, 2nd T20I: குல்பதில் நைப் அரைசதம்; இந்திய அணிக்கு 173 டார்கெட்!
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஃப்கானிஸ்தான் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டி20 போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆஃப்கானிஸ்தான் அணியை வீழ்த்தியதுடன், தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையும் பெற்றுள்ளது. இந்நிலையில் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் இரண்டாவது டி20 போட்டி இன்று இந்தூரிலுள்ள ஹொல்கர் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.
இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இன்றைய போட்டிக்கான இந்திய அணியில் விராட் கோலி மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் பிளேயிங் லெவனில் இடம்பிடித்துள்ளனர். இதனையடுத்து இன்னிங்ஸைத் தொடங்கிய ஆஃப்கானிஸ்தான் அணிக்கு ரஹ்மனுல்லா குர்பாஸ் - இப்ராஹிம் ஸத்ரான் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் அதிரடியாக விளையாடிய ரஹ்மனுல்லா குர்பாஸ் 14 ரன்களில் ஆட்டமிழந்தார். Read More...