Indian cricket team: Cricket News & Match Updates
கோலி, ரோஹித் டி20 கிரிக்கெட் அணியில் இருந்து விலகிக் கொள்ள வேண்டும்- ரவி சாஸ்திரி!
தற்பொழுது நடைபெற்று வரும் 16ஆஅவது ஐபிஎல் சீசன் மூலம் இந்திய டி20 கிரிக்கெட் வேறொரு பரிணாமத்திற்கு மாற இருக்கிறது என்பதைக் காட்டுகிறது. ரோஹித் சர்மா விராட் கோலி போன்ற இந்திய நட்சத்திர முன்னணி வீரர்கள் இந்திய டி20 கிரிக்கெட் அணியில் இருந்து விலகி இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட வேண்டிய தேவை உருவாகி இருப்பதை இந்த ஐபிஎல் தொடர் காட்டுகிறது.
நடப்பு ஐபிஎல் தொடரில் ரோஹித் சர்மாவின் ரன் சராசரி மிக மோசமாக இருக்கிறது. அவரால் நிலைத்து நின்று விளையாட முடியவில்லை. அவரிடமிருந்து அணி எதிர்பார்க்கும் பங்களிப்பை பேட்டிங்கில் அவரால் தர முடியவில்லை. இன்னொரு பக்கம் இந்த ஐபிஎல் தொடரில் 12 போட்டிகளில் 438 ரன்கள் குவித்து இருக்கும் விராட் கோலியின் ஸ்ட்ரைக் ரேட் 131 தான் இருக்கிறது. இவர் மிடில் ஓவர்களில் ஸ்பின்னுக்கு எதிராக ரன் கொண்டுவர மிகவும் தடுமாறுகிறார். Read More...