Indian cricket team: Cricket News & Match Updates
ஏசிசி தலைவராக ஜெய் ஷாவின் பதவிக்காலம் நீட்டிப்பு!
ஆசிய கிரிக்கெட் கவுன்சில் (ஏசிசி) பொதுக்கூட்டம் இன்று இந்தோனேசியாவின் பாலி நகரில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக இருக்கும் ஜெய் ஷா-வின் பதவிக்காலம் மேலும் 1 ஆண்டுக்கு நீட்டிக்கப்படுவதாக ஒரு மனதாக முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்தாண்டுடன் ஜெய் ஷாவின் பதவிக்காலம் முடிவடையவுள்ள நிலையில், அவரது பதவிக்காலம் மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
பிசிசிஐ செயலாளராக செயல்பட்டு வரும் ஜெய் ஷா, கடந்த 2021ஆம் ஆண்டு முதல் ஆசியா கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக செயல்பட்டு வருகிறார். இதுகுறித்து ஆசிய கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஜெய் ஷாவின் நீடிப்பு இலங்கை கிரிக்கெட் வாரிய தலைவர் ஷம்மி சில்வாவினால் இரண்டாவது முறையாக முன்மொழியப்பட்டது. அதனை ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் அனைத்து உறுப்பினர்களும் ஏகமனதாக ஏற்றுக்கொண்டுள்ளனர். Read More...