Indian cricket team: Cricket News & Match Updates
மீண்டும் இந்திய அணியில் இணையும் ரவிச்சந்திரன் அஸ்வின்!
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 445 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. அதன்பின் முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இங்கிலாந்து அணி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன், இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 207 ரன்களைச் சேர்த்தது.
இந்நிலையில் இரண்டாம் நாள் போட்டிக்கு பின் இந்திய அணியின் நட்சத்திர வீரர் அவசர அவசரமாக அணியிலிருந்து விலகி வீடு திரும்பியுள்ளார். இதுகுறித்து பிசிசிஐ வெளியிட்ட அறிவிக்கையில், “குடும்பத்தில் ஏற்பட்டுள்ள மருத்துவ அவசரம் காரணமாக ரவிசந்திரன் அஸ்வின் டெஸ்ட் அணியில் இருந்து வலிகியுள்ளார். இந்த சவாலான நேரத்தில், பிசிசிஐ மற்றும் அணியின் முழு ஒத்துழைப்பு அஸ்வினுக்கு உள்ளது," என குறிப்பிட்டிருந்தது. Read More...