Icc odi world cup 2023: Cricket News & Match Updates
உலகக்கோப்பை 2023: விராட் கோலி குறித்து மார்கஸ் ஸ்டொய்னிஸ் ஓபன் டாக்!
இந்திய அணி சொந்த நாட்டில் நடக்க இருக்கும் உலகக்கோப்பை தொடருக்கு முன்பாக ஆசிய கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. இந்தத் தொடர் ஆகஸ்ட் 30ஆம் தேதி ஆரம்பித்து செப்டம்பர் 17ஆம் தேதி வரையில் நடக்கிறது. இதற்கு அடுத்து இந்திய அணி உள்நாட்டில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக விளையாட இருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்தத் தொடரில் இந்திய அணி உலகக்கோப்பைக்கு எந்த மாதிரியான அணியை களம் இறக்குமோ, அதே மாதிரியான அணியை களம் இறக்கி விளையாடும். இரண்டு அணிகளுமே ஏறக்குறைய முழு பலம் கொண்ட அணியை இறக்கி தங்களை பரிசோதித்துப் பார்ப்பார்கள். மேலும் இந்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கு முன்பாக ஆஸ்திரேலியா அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இங்கு விளையாடி இருந்தது. இந்தத் தொடரை இந்திய அணி ஒன்றுக்கு இரண்டு என ஆஸ்திரேலிய அணியிடம் இழந்தது குறிப்பிடத்தக்கது. Read More...