Icc odi world cup 2023: Cricket News & Match Updates
இந்தியா, இங்கிலாந்து அணியை அரையிறுதியில் எதிர்கொள்ள எந்த அணியும் விரும்பாது - மைக்கேல் வாகன்!
கிரிக்கெட் உலகில் பல அதிரடியான கருத்துக்களை கூறி வரக்கூடியவராக இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் இருக்கிறார். இவருக்கும் இந்திய வீரரான வாசிம் ஜாஃபருக்கும் சமூக வலைதளத்தில் எப்போதும் ஏழாம் பொருத்தமாகவே இருந்து வரும். இந்திய கிரிக்கெட் குறித்து மைக்கேல் வாகனின் கருத்துகள் எப்பொழுதும் குத்தலாகவே இருக்கும்.
இந்த நிலையில் அவரது போக்கில் தற்போது கொஞ்சம் மாற்றம் ஏற்பட்டு, அவரது பார்வை அவர்களது நீண்ட கால எதிரியான ஆஸ்திரேலிய பக்கம் திரும்பியது. நடைபெற இருக்கும் உலகக் கோப்பையில் அரையிறுதிக்கு வரக்கூடிய நான்கு அணிகளாக அவர் கணித்த அணிகளில், அதிர்ச்சி அடையும் விதமாக ஆஸ்திரேலியா இல்லை. மேலும் இந்தியா இங்கிலாந்து இரண்டு அணிகள்தான் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் மோதும், இறுதியாக இங்கிலாந்து உலகக் கோப்பையை வெல்லும் என்று கூறியிருந்தார். Read More...