Icc odi world cup 2023: Cricket News & Match Updates
மகாராஜ் மாயஜாலத்தில் விக்கெட்டை இழந்த ஷுப்மன் கில் - வைரல் காணொளி!
ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் 37வது லீக் ஆட்டத்தில் இந்தியாவும் தென்னாப்பிரிக்கா அணியும் பல பரிட்சை நடத்துகின்றன. இந்தப் போட்டியில் யார் வெற்றி பெறுகிறார்களோ அவர்கள் புள்ளி பட்டியலில் நம்பர் ஒன் இடத்திற்கு சென்று விடுவார்கள். இதன் காரணமாக இரண்டு அணிகளும் இன்றைய ஆட்டத்தில் வெற்றிக்காக பலப் பரிட்சை நடத்துகின்றன.
மேலும் இவ்விரு அணிகளும் ஏற்கனவே அரை இறுதி சுற்றுக்கு தகுதி பெற்ற நிலையில் சமீபிரதாய ஆட்டமாக தான் இது நடைபெறுகிறது. எனினும் தோல்வியே தழுவாமல் இந்திய அணி விளையாடி வருவதால் தென்னாப்பிரிக்க அணி கடும் நெருக்கடியை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. கேப்டன் ரோகித் சர்மா வழக்கம் போல் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தார். Read More...