Icc odi world cup 2023: Cricket News & Match Updates
நாங்கள் சில தருணங்களில் நன்றாக செயல்பட்டோம் - ஸ்காட் எட்வர்ட்ஸ்!
உச்சக்கட்டத்தை எட்டியுள்ள ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று புனே நகரில் நடைபெற்ற 40ஆவது லீக் போட்டியில் நெதர்லாந்தை 160 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த நடப்பு சாம்பியன் இங்கிலாந்து தங்களுடைய 2ஆவது வெற்றியை பதிவு செய்தது. அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து பென் ஸ்டோக்ஸ் சதமடித்து 108, டேவிட் மாலன் 87 ரன்கள் எடுத்த உதவியுடன் 50 ஓவரில் 339/9 ரன்கள் எடுத்தது. நெதர்லாந்து சார்பில் அதிகபட்சமாக பஸ் டீ லீடி 3 விக்கெட்டுகளை சாய்த்தார்.
அதைத் தொடர்ந்து 340 ரன்களை துரத்திய நெதர்லாந்து சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்தி சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை இழந்து 37.2 ஓவரில் 179 ரன்களுக்கு ஆளவட்டானது. அந்த அணிக்கு அதிகபட்சமாக தேஜா நிதமனரு 41* ரன்கள் எடுக்க இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக மொயின் அலி மற்றும் அடில் ரசித் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் சாய்த்தனர். Read More...