Icc odi rankings: Cricket News & Match Updates
ஐசிசி தரவரிசை: முதலிடத்தை இழந்தது நியூசிலாந்து!
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து 3 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று வருகிறது. முதல்கட்டமாக 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. ஏற்கனவே ஹைதராபாத் மைதானத்தில் நடந்து முடிந்த முதல் ஒரு நாள் போட்டியில் இந்தியா 12 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைக் கண்டது. இதன் மூலம் 2 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.
இதையடுத்து, வெற்றியை தீர்மானிக்கும் 2ஆவது ஒரு நாள் போட்டி ராய்ப்பூர் மைதானத்தில் நேற்று நடந்தது. இதில், டாஸ் வென்ற ரோஹித் சர்மா என்ன கேட்க வேண்டும் என்பதை மறந்து தவித்துள்ளார். அதன் பிறகு சிறிது நேரம் கழித்து பௌலிங் தேர்வு செய்தார். இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் ராய்ப்பூர் மைதானத்தில் மோதும் முதல் போட்டி என்பதால், இந்த மைதானம் எப்படி இருக்கும் என்று யாருக்கும் தெரிந்திருக்காத ஒரு இக்கட்டான நிலையில், டாஸ் இந்தியாவிற்கு சாதகமானது. Read More...