England vs australia
தோனியின் சாதனையை முறியடித்த பென் ஸ்டோக்ஸ்!
ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் ஏற்கனவே இரண்டு போட்டிகளில் வென்று ஆஸ்திரேலியா முன்னிலை வகித்து வரும் நிலையில், மூன்றாவது போட்டியில் இங்கிலாந்து அணி வென்று அசத்தியது. இந்த போட்டியில் வென்றதன் மூலம், டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி வைத்திருந்த சாதனையை, இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் தனதாக்கியுள்ளார்.
மான்செஸ்டர் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் ஆஸ்த்ரேலிய அணி நிர்ணயித்த, 251 ரன்கள் என்ற இலக்கை 7 விக்கெட்டுகளை இழந்து போதிலும் இங்கிலாந்து அணி எட்டியது. இதன் மூலம் டெஸ்ட் போட்டிகளில் இரண்டாவது இன்னிங்ஸில் 250 ரன்களுக்கும் அதிகமான இலக்கை, அதிகமுறை சேஸ் செய்து வெற்றி பெற்ற அணியின் கேப்டன் என்ற பெருமையை ஸ்டோக்ஸ் பெற்றுள்ளார். அதுவும், இங்கிலாந்து அணியின் கேப்டனாக பொறுப்பேற்ற ஒரே ஆண்டில் அவர் இந்த சாதனையை படைத்துள்ளார். ஏற்கனவே, 277,299, 296 மற்றும் கடந்த ஆண்டு ஜுலை மாதம் நடைபெற்ற இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 378 ரன்கள் என்ற இமாலய இலக்கையும் பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி எட்டிப் பிடித்தது.
Related Cricket News on England vs australia
-
பந்துவீச்சிலும் நாங்கள் நன்றாக செயல்படவில்லை - பாட் கம்மின்ஸ்!
இரண்டாவது இன்னிங்ஸில் பந்துவீச்சிலும் நாங்கள் நன்றாக செயல்படவில்லை. அதனால் தான் தோல்வியை தழுவினோம் என்று போட்டி முடித்த பிறகு ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார். ...
-
ஆஷஸ் 2023: ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தொடரை தக்கவைத்தது இங்கிலாந்து!
ஆஸ்திரேலிய அணிக்கெதிரான மூன்றாவது ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று தொடரை தக்கவைத்துள்ளது. ...
-
ஆஷஸ் 2023: மழையால் பாதித்த ஆட்டம்; ஆஸியை கலங்கவைத்த இங்கிலாந்து!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 27 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
Ashes 2023, 3rd Test: இங்கிலாந்தை திணறவைத்த கம்மின்ஸ்; தடுமாற்றத்தில் ஆஸி!
இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட்டுகளை இழந்து 116 ரன்களை எடுத்துள்ளது. ...
-
3rd Ashes Test: Australia All Out for 263, England 68/3 On Day 1
Mitchell Marsh's run-a-ball 118 was the cornerstone of Australia's 263 on the first day of the third Ashes Test at Headingley on Thursday after the tourists collapsed either side of ...
-
ஆஷஸ் 2023: மிட்செல் மார்ஷ் அதிரடி சதம்; மார்க் வுட் அபார பந்துவீச்சு!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிவருகிறது. ...
-
அசுர வேகத்தில் பந்துவீசிய மார்க் வுட்; க்ளீன் போல்டான கவாஜா!
இங்கிலாந்து அணிக்கு எதிரான 3ஆவது ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. ...
-
டெஸ்ட் கிரிக்கெட்டில் ஸ்டீவ் ஸ்மித்திற்க் இரண்டாம் இடம் தான் - ரிக்கி பாண்டிங்!
டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அபாரமாக செயல்பட்டு வரும் ஸ்டீவ் ஸ்மித், என்னை பொறுத்தவரை மிகச் சிறந்த வீரர்களில் இரண்டாம் இடத்தில் இருக்கிறார். முதலிடம் யாருக்கு? என்பது குறித்து ரிக்கி பாண்டிங் பதில் கூறியுள்ளார். ...
-
ஆஷஸ் 2023: இங்கிலாந்து vs ஆஸ்திரேலியா, மூன்றாவது டெஸ்ட் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இங்கிலாந்து - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான மூன்றவாது ஆஷஸ் டெஸ்ட் போட்டி நாளை லீட்ஸில் நடைபெறுகிறது. ...
-
ஆஷஸ் 2023: மூன்றாவது டெஸ்டிற்கான இங்கிலாந்து பிளேயிங் லெவன் அறிவிப்பு!
ஆஸ்திரேலிய அணிக்கெதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவன் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
கிரிக்கெட்டில் இந்த விதிமுறையையும் கொண்டு வர வேண்டும் - அஸ்வின்!
கடுமையான தசை பிடிப்பு மற்றும் நரம்பு பிடிப்பு அல்லது வேறு ஏதும் பலமான காயங்கள் ஏற்படும் பட்சத்தில் அதற்கும் மாற்று வீரர்களை பயன்படுத்திக் கொள்வதற்கு விதிமுறைகளை கொண்டுவர வேண்டும் என ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார். ...
-
பாண்டிங்கின் அட்வைஸை கேட்ட இங்கிலாந்து; மார்க் வுட் சேர்ப்பு!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியில் மார்க் வுட் சேர்க்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது ...
-
ஆஷஸ் 2023: ஆண்டர்சன்னுக்கு பதிலாக வுட்டை தேர்வு செய்ய வேண்டும் - ரிக்கி பாண்டிங்!
ஆஷஸ் தொடரில் அதிகளவு ரன்களை வாரி வழங்கும் ஜேம்ஸ் ஆண்டர்சன்னுக்கு பதிலாக மார்க் வுட்டை அணியில் சேர்க்க வேண்டும் என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். ...
-
ஆஷஸ் 2023: காயம் காரணமாக தொடரிலிருந்து விலகிய ஒல்லி போப்!
ஆஷஸ் டெஸ்ட் தொடரில் காயமடைந்த இங்கிலாந்து அணியின் துணைக்கேப்டன் ஒல்லி போப் எஞ்சியுள்ள டெஸ்ட் போட்டிகளிலிருந்து விலகியுள்ளார். ...
Cricket Special Today
-
- 06 Jul 2026 09:14