Caribbean premier league: Cricket News & Match Updates
சிபிஎல் 2024: நைட் ரைடர்ஸை மீண்டும் வீழ்த்தியது ஃபால்கன்ஸ்!
கரீபியன் பிரிமியர் லீக் தொடரின் 12ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற 20ஆவது லீக் போட்டியில் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் மற்றும் ஆன்டிகுவா & பார்புடா ஃபால்கன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற ஃபால்கன்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய நைட் ரைடர்ஸ் அணியில் டார் ஆர்டர் வீரர்கள் எதிரணியின் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். அதன்படி அணியின் தொடக்க வீரர்கள் பேரிஸ் 9 ரன்களுக்கும், சுனில் நரைன் 4 ரன்களுக்கும் என விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய நிக்கோலஸ் பூரன் 14 ரன்களிலும், கேசி கார்டி 8 ரன்களிலும் என ஆட்டமிழந்தனர். இதனையடுத்து ஜோடி சேர்ந்த டிம் டேவிட் மற்றும் கேப்டன் கீரன் பொல்லார்ட் இணை பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். Read More...