Andre russell big six: Cricket News & Match Updates
ஆண்ட்ரே ரஸல் விளாசிய இமாலய சிக்ஸர்; வைரலாகும் காணொளி!
சிபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற 8ஆவது லீக் போட்டியில் ஆன்டிகுவா & பார்புடா ஃபால்கன்ஸ் அணியை எதிர்த்து டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தியது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த ஃபால்கன்ஸ் அணியானது இமாத் வசிம், ஃபேபியன் ஆலனின் அதிரடியான ஆட்டத்தின் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்திருந்தாலும், 176 ரன்களைச் செர்த்தது.
இதில் அதிகபட்சமாக இமாத் வசீம் 46 ரன்களையும், ஃபகர் ஸமான் 38 ரன்களையும், ஜஸ்டின் க்ரீவ்ஸ் 37 ரன்களையும் சேர்த்தனர். நைட் ரைடர்ஸ் அணி தரப்பில் சுனில் நரைன் மற்றும் சலாம்கெயில் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறினர். பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணியானது எதிரணி பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் சீரான இடைவேளையில் விக்கெட்டுகளை இழந்து நடையைக் கட்டினர். Read More...