Zim vs afg 2nd t20i: Cricket News & Match Updates
ஜிம்பாப்வேவை வீழ்த்தி டி20 தொடரை வென்றது ஆஃப்கானிஸ்தான்!
ஆஃப்கானிஸ்தான் அணி தற்சமயம் ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் செய்து தற்சமயம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த முதல் டி20 போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டியானது ஹராரேவில் இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து ஆஃப்கானிஸ்தானை பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய ஜிம்பாப்வே அணிக்கு பிரையன் பென்னட் - தியான் மேயர்ஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் தியான் மேயர்ஸ் 6 ரன்னிலும், பிரையன் பென்னட் 16 ரன்னிலும் என விக்கெட்டுகளை இழந்தனர். பின்னர் களமிறங்கிய பிராண்டன் டெய்லரும் 3 ரன்களில் விக்கெட்டை இழந்தார். பின்னர் களமிறங்கிய சிக்கந்தர் ரஸா ஒருபக்கம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில், மறுபக்கம் களமிறங்கிய ரியான் பார்ல் 10 ரன்னிலும், முனியங்கா 19 ரன்னிலும், தஷிங்கா முசெகிவ 13 ரன்னிலும் என விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். Read More...