Yashasvi jaiswal: Cricket News & Match Updates
4th Test, Day 1: ஜெய்ஸ்வால், சாய் அரைசதம்; ரன் குவிப்பில் இந்திய அணி!
Manchester Test: இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்து வரும் இந்திய அணியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் சாய் சுதர்ஷன் ஆகியோர் அரைசதம் கடந்து அசத்தினர்.
இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான ஆண்டர்சன் - டெண்டுல்கர் கோப்பை டெஸ்ட் தொடரின் நான்காவது டெஸ்ட் போட்டி இன்று மான்செஸ்டரில் உள்ள ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் கேஎல் ராகுல் இணை தொடக்கம் கொடுத்தனர். இப்போட்டியின் ஆரம்பம் முதலே இருவரும் நிதானமாக விளையாடி விக்கெட் இழக்கும் வாய்ப்புகளைக் குறைத்ததுடன், தேவைப்படும் பந்துகளில் மட்டும் பவுண்டரிகளை அடித்து அணியின் ஸ்கோரையும் உயர்த்தினர். Read More...