Vvs laxman: Cricket News & Match Updates
டிராவிட்டிற்கு பின் பயிற்சியாளர் பொறுப்பை ஏற்கும் விவிஎஸ் லக்ஷ்மண்- தகவல்!
2023 உலகக்கோப்பை தொடர் முடிந்த உடன் இந்தியா - ஆஸ்திரேலியா டி20 தொடர் நடைபெற உள்ளது. அந்த தொடரில் இந்திய அணியில் மிகப் பெரிய மாற்றங்கள் நடைபெற உள்ளன. குறிப்பாக அணியின் பயிற்சியாளராக விவிஎஸ் லக்ஷ்மன் செயல்படுவார் என்ற தகவலை பிசிசிஐ கசிய விட்டுள்ளது . இது நிரந்தரமான பதவியா? அல்லது தற்காலிக பதவியா? என்பது ராகுல் டிராவிட் கையில் தான் உள்ளது. உலகக்கோப்பை முடிந்த பின் டிராவிட் தன் ஒப்பந்தத்தை முடித்துக் கொண்டு விடை பெறவும் வாய்ப்பு உள்ளதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்திய வீரர்கள் கடந்த செப்டம்பர் மாதம் முதல் நவம்பர் இரண்டாவது வாரம் வரை தொடர்ந்து கிரிக்கெட் விளையாடி இருப்பார்கள் என்பதால் நவம்பர் மூன்றாவது வாரத்தில் தொடங்கும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 தொடரில் தற்போது அணியில் விளையாடி வரும் இந்திய வீரர்களுக்கு நீண்ட ஓய்வு அளிக்க முடிவு செய்துள்ளது பிசிசிஐ. அதற்கு பதில் இளம் வீரர்கள் கொண்ட அணி, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக களமிறங்கும். Read More...