Tamil cricket news: Cricket News & Match Updates
ஐபிஎல் 2023: மினி ஏலத்திற்கான இடம், தேதி தொடர்பான அறிவிப்பு வெளியானது!
ஐபிஎல் 2023ஆம் ஆண்டு சீசன் தொடங்க இன்னும் 4 மாதங்களே உள்ளது. இதனால் அடுத்த சீசனுக்கான பணிகளை பிசிசிஐ தீவிரமாக தொடங்கியுள்ளது. ஏற்கனவே எந்த அணி, எந்த வீரர்களை விடுவிக்கிறோம் என்பது தொடர்பான அறிவிப்பை வரும் 15ஆம் தேதிக்குள் விடுவிக்க வேண்டும் என்று பிசிசிஐ அறிவித்தது. இந்த நிலையில், சிஎஸ்கே அணி கேப்டன் தோனி ஏற்கனவே ஐபிஎல் போட்டிக்காக தனது பயிற்சியை தொடங்கி வருகிறார்.
டெல்லி அணி ஷர்துல் தாக்கூர், கேஎஸ் பரத், நியூசிலாந்து வீரர் டிம் செஃபர்ட், அஸ்வின் ஹேபர், மந்தீப் சிங் ஆகியோரை விடுவிக்க உள்ளது. சிஎஸ்கே அணி ஆடம் மில்னே மற்றும் கிறிஸ் ஜார்டன் ஆகியோரை விடுவிக்க உள்ளது. அதற்கு பதிலாக இம்முறை ஏலத்தில் பங்கேற்க உள்ள சாம் கரனையும், டெல்லி அணி விடுவித்துள்ள ஷர்துல் தாக்கூரையும் சிஎஸ்கே ஒப்பந்தம் செய்ய முயற்சிக்கிறது. தீபக் சாஹரும் உடல் தகுதியுடன் இருந்தால், சென்னை அணி ஒரு வகையில் பலமான அணியை தயாரித்துவிடும். Read More...