Tamil cricket news: Cricket News & Match Updates
சச்சினின் சாதனையை தகர்த்த விராட் கோலி!
சமகாலத்தின் தலைசிறந்த வீரர்களில் ஒருவரான விராட் கோலி, சர்வதேச கிரிக்கெட்டில் சதங்களையும் சாதனைகளையும் குவித்துவருகிறார். 2019லிருந்து 2022 ஆசிய கோப்பைக்கு முன்புவரை ஒரு சதம் கூட அடிக்காத விராட் கோலி கடும் விமர்சனத்துக்குள்ளான நிலையில், ஆசிய கோப்பையில் ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் சதமடித்து, மீண்டும் தனது சத கணக்கை தொடங்கினார்.
அதன்பின்னர் வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் சதமடித்து, 2022ஆம் ஆண்டை சதத்துடன் முடித்த விராட் கோலி, இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இன்று சதமடித்து, 2023ஆம் ஆண்டை சதத்துடன் தொடங்கியுள்ளார். இலங்கைக்கு எதிராக இன்று நடந்துவரும் முதல் ஒருநாள் போட்டியில் அபாரமாக பேட்டிங் ஆடிய விராட் கோலி ஒருநாள் கிரிக்கெட்டில் 45ஆவது சதத்தை விளாசினார். சர்வதேச கிரிக்கெட்டில் இது விராட் கோலியின் 73வது சதமாகும். Read More...