Tamil cricket news: Cricket News & Match Updates
ஆஸ்திரேலியா அணி சவால்களை எதிர்கொள்வதற்கு தயாராக இருப்பதாக உணர்கிறேன் - சச்சின் டெண்டுல்கர்!
கிரிக்கெட் உலகில் பலரது எதிர்பார்ப்புக்கு இலக்காகி இருக்கும் பார்டர் கவாஸ்கர் கோப்பையின் முதல் டெஸ்ட் போட்டி நாளை நாக்பூர் மைதானத்தில் இந்திய ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே துவங்க இருக்கிறது. இந்த சுற்றுப்பயணத்திற்கு ஆஸ்திரேலியா கிளம்பியதில் இருந்து, இந்திய கிரிக்கெட் அணி நிர்வாகம் உருவாக்கும் சுழற் பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளங்கள் குறித்து ஆஸ்திரேலியா முன்னாள் வீரர்களிடமிருந்து கடுமையான வார்த்தைகள் வெளிப்பட ஆரம்பித்திருந்தன.
இந்த நிலையில் நேற்று நாக்பூர் மைதானத்தின் ஆடுகள புகைப்படங்கள் வெளிவந்ததில் இருந்து கடுமையான வார்த்தைகள் பெரிய குற்றச்சாட்டுகளாக மாறி ஐசிசி இதில் தலையிட வேண்டும் என்கின்ற அளவுக்கு எல்லாம் சென்றது. இன்று இதற்கு பதில் அளித்து பேசிய இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா ஆடுகளத்தைப் பற்றி கவலைப்படாமல் அடுத்த ஐந்து நாட்கள் எப்படி விளையாட வேண்டும் என்பதை பற்றி சிந்திப்பதே நல்லது என்று பதிலடி தந்தார். Read More...